குறித்தவொரு இனத்தின் தனி அங்கி தனியன் என அழைக்கப்படும்.
குறித்தவொரு பிரதேசத்தில் குறித்தவொரு காலப்பகுதியில் வாழும் ஒரே இனத்தைச் சேர்ந்த அங்கிகள் ஒன்றாக குடித்தொகை எனப்படும்.
குடித்தொகையின் பருமனானது (அடர்த்தி) -
- பிறக்கும் அங்கிகளின் எண்ணிக்கை,
- இறக்கும் அங்கிகளின் எண்ணிக்கை,
- குடியகல்வு,
- குடிவரவு
ஆகியவற்றில் தங்கியிருக்கும்.
குடித்தொகையொன்றின் அடர்த்தி காலத்துக்குக்காலம் வேறுபடும்.
குறித்த வாழிடமொன்றில் இடைத்தொடர்புகளை தமக்கிடையே பேணியவாறு வாழும் சகல குடித்தொகைகளினதும் கூட்டே சமுதாயம் (சாகியம்) எனப்படும்.
ஒரு அங்கி மற்றொரு அங்கியை இரையாகக் கொள்ளல் இரைகௌவல் எனப்படும்.
ஒரு இனத்தைச் சேர்ந்த அங்கிகள் இன்னொரு இனத்துக்குரிய அங்கியின் உடலில் நேரடியாக அகத்துறிஞ்சி தமது போசணைத் தேவையை ஈடுசெய்யுமாயின் அது ஒட்டுடுண்ண்ணி ஈட்டம் எனப்படும்.
ஒன்றியவாழி ஈட்டத்தைக் கொண்டுள்ள அங்கிகள் இரண்டும் அனுகூலத்தைப் பெறுகின்றன.
ஒரு அங்கிக்கு அனுகூலமாக அமைவதும் மறு அங்கிக்கு அனுகூலமாக அல்லது பிரதிகூலமாக அமையாத தொடர்பு ஓரட்டிலுண்ணல் எனப்படும்.
குறித்த பிரதேசமொன்றில் வாழும் அனைத்த உயிருள்ள குடித்தொகைகளும் அதனுடன் இடைத்தொடர்பைப் பேணும் உயிரற்ற சூழல் ஒருங்கே சூழற்றொகுதி என அழைக்கப்படும்.
• புவியில் அங்கிகள் பரந்து காணப்படும் பிரதேசம் உயிர்க்கோளம் (உயிரின மண்டலம்) எனப்படும்.
No comments:
Post a Comment