மனித நடவடிக்கைகள் காரணமாக சூழற்றொகுதியில் பாதமான நிலைமைகள் ஏற்படுகின்றன.
சனத்தொகை வளர்ச்சி, காடழித்தல், நீர்ப்பாசனத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விவசாயம், நகரமயமாக்கல், கைத்தொழில் மயமாக்கல் ஆகியனவே இதற்கான காரணங்களாகும்.
சூழல் மாசடைதலை வளி மாசடைதல், நீர் மாசடைதல், மண் மாசடைதல் என மூன்றாக வகைப்படுத்தலாம்.
சூழல் மாசடைதல் காரணமாக புவிமுழுவதும் சூழல் நெருக்கடி ஏற்படுகிறது.
புவி வெப்பமடைதல், அமில மழை, ஓசோன் படைக்கு பாதிப்பு ஏற்படல், பாலைவனமாதல், உயிர்ப்பல்வகைமை அழிவுறுதல், போசணையின்மைஆகியன இவ்வாறான சில சூழல் நெருக்கடிகளாகும்.
சூழல் மாசடைதலை தவிர்ப்பதற்காக பல்வேறு பாதுகாப்பு அணுகுமுறைகளை கைக்கொள்ளலாம்.
உயிரிப்பல்வகைமைக் காப்பு, மக்களுக்கு விழிப்புணர்வூட்டல், சுற்றாடல் பாதுகாப்பு சட்டங்கள், சர்வதேச பிரகடனங்கள் ஆகியன இதற்கான சில உதாரணங்களாகும்.
சூழற்பாதுகாப்பில் பூகோள ரீதியாக சிந்திப்போம். பிரதேச ரீதியாக பங்களிப்புச் செய்வோம் எனும் சிந்தனையை மதித்து நடத்தல் வேண்டும்.
உயிரியல் வகை காப்பு
1.வாழிடத்தில் காத்தல்,
2.பிற இடங்களில் காத்தல்
என இருவகைகளில் மேற்கொள்ளப்படும்.
அங்கிகளை அவை வாழும் இடங்களிலேயே காத்தல், வாழிடத்தில் காத்தல் எனப்படும். இதற்கான உதாரணங்களாவன:
• சரணாலயம்
• கடுமையாகப் பாதுகாக்கப்பட்ட பிரதேசம்
• தேசிய வனப்பூங்கா
அங்கிகளை அவற்றின் இயற்கையான வாழிடங்களுக்கு வெளியேயுள்ள பிற இடங்களில் பாதுகாத்தல், பிற இடங்களில் காத்தல் எனப்படும். அதற்கான உதாரணங்களாவன:
• விலங்கினக் காட்சியகம்,
*தாவரவியல்பூங்கா, விலங்கியல் பூங்கா,
* பாதுகாப்பு மையங்கள்.
* பாதுகாப்பு மையங்கள்.
சூழலியல் தாக்கங்களினால் அருகிச் செல்லும் ஆபத்தை அங்கிகள் எதிர்நோக்கியுள்ளதால் அங்கிகளை பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.