Saturday, October 29, 2011

சூழலை பாதுகாப்போம்.

மனித நடவடிக்கைகள் காரணமாக சூழற்றொகுதியில் பாதமான நிலைமைகள் ஏற்படுகின்றன.

சனத்தொகை வளர்ச்சி, காடழித்தல், நீர்ப்பாசனத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விவசாயம், நகரமயமாக்கல், கைத்தொழில் மயமாக்கல் ஆகியனவே இதற்கான காரணங்களாகும்.

சூழல் மாசடைதலை வளி மாசடைதல், நீர் மாசடைதல், மண் மாசடைதல் என மூன்றாக வகைப்படுத்தலாம்.

சூழல் மாசடைதல் காரணமாக புவிமுழுவதும் சூழல் நெருக்கடி ஏற்படுகிறது.

புவி வெப்பமடைதல், அமில மழை, ஓசோன் படைக்கு பாதிப்பு ஏற்படல், பாலைவனமாதல், உயிர்ப்பல்வகைமை அழிவுறுதல், போசணையின்மைஆகியன இவ்வாறான சில சூழல் நெருக்கடிகளாகும்.

சூழல் மாசடைதலை தவிர்ப்பதற்காக பல்வேறு பாதுகாப்பு அணுகுமுறைகளை கைக்கொள்ளலாம்.

உயிரிப்பல்வகைமைக் காப்பு, மக்களுக்கு விழிப்புணர்வூட்டல், சுற்றாடல் பாதுகாப்பு சட்டங்கள், சர்வதேச பிரகடனங்கள் ஆகியன இதற்கான சில உதாரணங்களாகும்.

சூழற்பாதுகாப்பில் பூகோள ரீதியாக சிந்திப்போம். பிரதேச ரீதியாக பங்களிப்புச் செய்வோம் எனும் சிந்தனையை மதித்து நடத்தல் வேண்டும்.

உயிரியல் வகை காப்பு

1.வாழிடத்தில் காத்தல்,
2.பிற இடங்களில் காத்தல்

என இருவகைகளில் மேற்கொள்ளப்படும்.

அங்கிகளை அவை வாழும் இடங்களிலேயே காத்தல், வாழிடத்தில் காத்தல் எனப்படும். இதற்கான உதாரணங்களாவன:

• சரணாலயம்
• கடுமையாகப் பாதுகாக்கப்பட்ட பிரதேசம்
• தேசிய வனப்பூங்கா

அங்கிகளை அவற்றின் இயற்கையான வாழிடங்களுக்கு வெளியேயுள்ள பிற இடங்களில் பாதுகாத்தல், பிற இடங்களில் காத்தல் எனப்படும். அதற்கான உதாரணங்களாவன:

• விலங்கினக் காட்சியகம்,
*தாவரவியல்பூங்கா, விலங்கியல் பூங்கா,
* பாதுகாப்பு மையங்கள்.

சூழலியல் தாக்கங்களினால் அருகிச் செல்லும் ஆபத்தை அங்கிகள் எதிர்நோக்கியுள்ளதால் அங்கிகளை பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Sunday, October 23, 2011

சூழற்றொகுதிகளின் சமநிலை

புவியிலுள்ள சகல சூழற்றொகுதிகளுக்கும் சக்தியை வழங்கும் பிரதான மூலம் சூரியனாகும்.

சூழற்றொகுதியினூடாக நடைபெறும் சக்தியின் பாய்ச்சலை பின்வருமாறு காட்டலாம்.
• பச்சைத் தாவரங்கள் உற்பத்தியாக்கிகள், உயிரற்ற சூழலிலுள்ள
 மூலப்பொருட்களையும் ஒளிச் சக்தியiயும் பயன்படுத்தி உணவைத் தயாரிப்பனவாகும்.

• இவ்வாறு சேமிக்கப்பட்டுள்ள சக்தி உணவுச் சங்கிலி, உணவுவலை ஆகியவற்றினூடாக நுகரிகளை வந்தடையும்.

• உணவுச் சங்கிலியின் ஒரு இணைப்பிலிருந்து மற்றைய இணைப்புக்கு
சக்தி ஊடுகடத்தப்படும்போது 90% சக்தி இழக்கப்படுகின்றது.

- சூழற்றொகுதியினூடாக சக்தியின் பாய்ச்சலை கூம்பாக வரிப்படம் மூலம் காட்டலாம்.

- அங்கிகள் தமக்குத் தேவையான மூலப்பொருட்களை உயிரற்ற சூழலிலிருந்து பெற்றுக்கொள்கின்றன.

- உயிரற்ற சூழலிலுள்ள இம் மூலப்பொருட்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளன.
- இதனால் அங்கிகளால் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் குறித்த வட்டச்செயன்முறைகள் மூலம் மீண்டும் சூழலுக்கு விடுவிக்கப்படும்.
- நுண்ணங்கிகள் (பிரிகையாக்கிகள்) இவ் வட்டச் செயன்முறை நடைபெற பெரும் பங்களிப்பை வழங்குகின்றன.

- சூழற்றொகுதியில் பிரதானமாக நைதரசன், காபன், ஒட்சிசன், போன்ற மூலக வட்டங்கள் நடைபெறுகின்றன.

- ஒட்சிசன், காபன் ஆகிய வட்டங்கள் நடைபெறுவதில் தாவரங்கள் பங்களிப்புச் செய்கின்றன.

- சூழலிலிருந்து காபனீரொட்சைட்டைப் பெற்று ஒட்சிசனை வெளிவிடும் ஒரேயொரு செயன்முறை ஒளித்தொகுப்பாகும். சூழலில் காபன் வட்டம் நடைபெறும் முறையை பின்வருமாறு காட்டலாம்.





பிரிதலுக்குட்படாத சேதனப்பொருட்களை சூழலுக்கு சேர்த்தல் மூலம் மனிதனால் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படுகின்றது.

- பொலித்தீன், பொலிஸ்ரயரின் (றிஜிபோம்) அல்ட்றின், டீசுப்ட்றின், ரொக்சோபின் ஆகியன இவ்வாறான பதார்த்தங்களுக்கு உதாரணமாகும்.

- மண் சேதனப்பொருட்களுள் உயிர்ச்சுவடுகளாக மாற்றமடையும்போது பின்வரும் மாற்றங்கள் நடைபெறுகின்றன.

- அவை காற்றின்றிய நிலையில் பற்றீரியாக்களினால் சிதைவடையச் செய்யப்படுகின்றன.
- உயர் அமுக்கத்திலும் உயர் வெப்பநிலையின் கீழும் மில்லியன் கணக்கான வருடங்களுக்கு உட்பட்டு சேதனப்பொருட்கள் ஐதரோகாபன்களாக மாற்றமடைதல்.

- நைதரசன் வட்டத்தை பின்வருமாறு காட்டலாம்.



வளிமண்டலத்தில் 78% மான N2 வாயு காணப்பட்ட போதிலும் பொதுவாக அங்கிகளினால் N2 வாயுவை பயன்படுத்த முடியாது.

- நைதரசனை பதிக்கும் பற்றீரியாக்கள் மட்டுமே வளிமண்டல நைதரசனை நைதரசன் சேர்வைகளாக மாற்றும் வல்லமையைக் கொண்டுள்ளன.

 இச்செயற்பாடு உயிரியல் முறை நைதரசன் பதித்தல் எனப்படும்.

- மண்ணில் உள்ள நைதரசன் கொண்ட சேதனச்சேர்வைகளை அமுகல்வளரி பற்றீரியாக்களின் தொழிற்பாட்டால் அமோனியம் அயன்களாக  NH4+ மாற்றப்படும்.

- சில மண்வாழ் பற்றீரியாக்கள் மண்ணிலுள்ள நைத்திரேற்று அயன்களை NO3- N2 வாயுவாக மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளன.

- இச்செயன்முறை நைதரசனிறக்கம் எனப்படும்.

- சில பற்றீரியாக்கள்  NH4+ அயன்களை NO3- அயன்களாக மாற்றும் திறனைக் கொண்டவையாகும்.

- இச்செயன்முறை நைத்திரேற்றாக்கல் எனப்படும்.

- தாவரங்கள் மண்ணிலிருந்து நைத்திரேற்று, அமோனியம் அயன்களாகவே நைதரசனைப் பெற்றுக்கொள்கின்றன.

நைதரசன் வட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மனித செயற்பாடுகள் சில வருமாறு:

- உயிர்ப்பிரிந்தழிதலுக்கு உட்படாத நைதரசன் கொண்ட சேதனப் பொருட்களை சூழலில் சேர்த்தல்.

- நைதரசன் பசளைகளை இடுதல்.

- நுண்ணங்கிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பதார்த்தங்களை மண்ணில் சேர்த்தல்.

- நுண்ணங்கிகளுக்குப் பாதகமான சூழல் நிலைமைகளை ஏற்படுத்தல்.